செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 30 நவம்பர் 2019 (22:33 IST)

சென்னையில் இன்று விடிய விடிய மழை: தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை!

சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களில் இன்று விடிய விடிய கனமழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை விடுத்துள்ளார் 
 
சென்னை உள்பட தமிழகத்தில் மழை நிலவரங்களை அவ்வப்போது தனது பேஸ்புக்கில் தெரிவித்துவரும் தமிழ்நாடு வெதர்மேன், சற்று முன் தனது பேஸ்புக்கில் ’சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மழை மேகம் அதிகம் காணப்படுவதால் இரவு முழுவதும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், எனவே இரவில் வெளியே செல்வதை பொதுமக்கள் தவிர்க்கவும் என்றும் குறிப்பிட்டு உள்ளார் 
 
அதேபோல் விழுப்புரம் திருவண்ணாமலை கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் இன்று இரவு கனமழை இருக்கும் என்றும் இந்த மழை நாளை அதிகாலை வரை நீடிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று முதல் 3 நாட்களுக்கு சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவித்துள்ளதை அடுத்து தமிழ்நாடு வெதர்மேன் அதனை உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
எனவே இன்று இரவு காட்சிக்கு திரைப்படம் செல்ல திட்டமிட்டு உள்ளார்கள் அதை தவிர்ப்பது நலம் என்று அறிவுறுத்தப்படுகிறது