1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tamil Nadu voters list released

தமிழகத்தில் வாக்காளர்களின் எண்ணிக்கை எவ்வளவு? தேர்தல் ஆணையர் அறிவிப்பு

voters
தமிழகத்தின் வாக்காளர் பட்டியல் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் சற்று முன் தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு அவர்கள் வாக்காளர் விவரங்களை தெரிவித்துள்ளார்.
 
 தமிழகத்தின் மற்ற 6.20 கோடி வாக்காளர்கள் உள்ளனர் என்றும் இதில் ஆண் வாக்காளர்கள் 3.04 கோடி என்றும் பெண் வாக்காளர்கள் 3.15 கோடி என்றும் அறிவித்துள்ளார்.
 
மேலும் தமிழகத்தில் மூன்றாம் பாலினத்தவர் 8,027 பேர் வாக்காளர்களாக உள்ளனர் என்றும் வெளிநாட்டு வாக்காளர்கள் 3,310 பேர் உள்ளனர் என்றும் அவர் அறிவித்துள்ளார். 
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி நடைபெற்று வந்த நிலையில் அந்த பணி முடிந்து தற்போது இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இதனை அடுத்து தமிழகம் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராகி உள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
இன்பநிதி போட்டோ வைரலானதற்கு அண்ணாமலை காரணமா? – காயத்ரி ரகுராம் சாடல்!