1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : வியாழன், 5 ஜனவரி 2023 (11:15 IST)

இன்பநிதி போட்டோ வைரலானதற்கு அண்ணாமலை காரணமா? – காயத்ரி ரகுராம் சாடல்!

Gayathri Raghuram
சமீப காலமாக சமூக வலைதளங்களில் உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பநிதியும், ஒரு பெண்ணும் உள்ள புகைப்படம் வைரலாகி வருவது குறித்து காயத்ரி ரகுராம் கருத்து தெரிவித்துள்ளார்.

சேப்பாக்கம் எம்.எல்.ஏவும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பநிதி. சமீபத்தில் இன்பநிதியும், ஒரு பெண்ணும் இருக்கும் சில செல்பி படங்கள் சமூக வலைதளத்தில் பரவின. இதுகுறித்து சிலர் விமர்சனங்களை வைத்து வருகின்றனர். ஆனால் பலர் அது அவர்களது தனிப்பட்ட வாழ்க்கை அதை எதற்கு இப்படி விமர்சிக்க வேண்டும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்நிலையில் இன்பநிதி போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாவதற்கு காரணம் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலையின் ஆட்கள்தான் என பாஜகவிலிருந்து சமீபத்தில் விலகிய காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் “தற்போது அண்ணாமலை டீம் உதயநிதி ஸ்டாலின் மகனின் புகைப்படத்தை கசியவிட்டு அந்த புகைப்படத்தில் இருக்கும் பெண்ணையும் அவமானப்படுத்துகிறது. பெண்கள் எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும் அண்ணாமலை தலைமையில்? அடல்ட் வீடியோ ஆடியோ போட்டோ புகழ் அண்ணாமலை” என்று கூறியுள்ளார்.

மேலும் தனிநபர் தாக்குதல் அருவறுக்கத்தக்கது எனவும், அண்ணாமலை அரசியல்ரீதியாக மோதவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Edit By Prasanth.K