திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 2 ஏப்ரல் 2022 (13:31 IST)

தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, வெப்ப சலனத்தால் தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தகவல். 

 
தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி வருகிறது. வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள், வாகனஓட்டிகள் பலர் சாலையோர இளநீர் கடைகள், பழச்சாறு கடைகளை நாடும் நிலை உள்ளது.
 
இப்படி இருக்கையில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, வெப்ப சலனத்தால் தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்தது. இன்று மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்கள், அதையொட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், நெல்லை, குமாரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.