வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 2 ஏப்ரல் 2022 (13:04 IST)

தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கத் தலைவர் விஜய் ரசிகர்கள் மீது புகார்!

பீஸ்ட் படத்தின் கட் அவுட்டிற்கு விஜய் ரசிகர்கள் சிலர் பால் அபிஷேகம் செய்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. 

 
தளபதி விஜய், பூஜா ஹெக்டே நடித்த ‘பீஸ்ட்’  திரைப்படம் ஏப்ரல் 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது தெரிந்ததே. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியாக உள்ளது. 
 
இதனிடையே பீஸ்ட் பட கட் அவுட்டிற்கு பாலாபிஷேகம் செய்த ரசிகர்கள் மற்றும் தடுக்க தவறிய நடிகர் விஜய் மீது தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கம் சார்பில் புகார் அளிக்கபட்டது. தமிழ்நாடு பால்முகவர் சங்கத்தின் நிறுவன தலைவர் பொன்னுசாமி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். 
 
அந்த புகாரில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது பீஸ்ட் படத்தின் கட் அவுட்டிற்கு விஜய் ரசிகர்கள் சிலர் பால் அபிஷேகம் செய்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. பாலாபிஷேகம் செய்த ரசிகர்கள் மீதும், ரசிகர்களின் இந்த செயலை கண்டிக்காத நடிகர் விஜய் மீது வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். 
 
மேலும் நடிகர்களின் கட் அவுட்டுகளின் மேலேறி மாலை அணிவித்து பாலாபிஷேகம் செய்ய நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளார்.