பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் இன்றும் மழை!

Sugapriya Prakash| Last Modified வியாழன், 29 ஜூலை 2021 (12:40 IST)
தென்மேற்கு பருவக்காற்று காரணமாக மழை பெய்து வரும் நிலையில் இன்றும் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 
ஆம், தென்மேற்கு பருவக்காற்று காரணமாக கோவை, நீலகிரி மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அடுத்த 3 நாட்களுக்கு கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என கூறியுள்ளது. மேலும், தமிழ்நாட்டின் இதர மாவட்டங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நீடிக்கும் என கூறப்பட்டுள்ளது. 


இதில் மேலும் படிக்கவும் :