1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tamil Nadu to have rain again

தமிழகத்தில் மீண்டும் கனமழை: வானிலை ஆய்வு மையம்!

Northeast Monsoon
தமிழகத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு. 
 
வங்க கடலில் உருவான நிவர் புயல் புதுச்சேரி அருகே கரையை கடந்த நிலையில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. பல இடங்களில் மழை வெள்ளம் சூழ்ந்த நிலையில் வேளாண் நிலங்கள், பயிர்கள் வீணாகின. இந்நிலையில் தற்போது வங்க கடலில் அந்தமான் தீவுப்பகுதிக்கு தெற்கே புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  
 
இந்நிலையில், தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறவும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது. எனவே இதனால் தமிழகத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  
 
அதாவது, நவம்பர் 30 ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தென் தமிழகத்தில் டிசம்பர் 1 ஆம் தேதி ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
 
சென்னை நகர் மற்றும் புறநகரில் 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். தமிழகத்தில் தென் கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என கூறப்பட்டுள்ளது. 
அடுத்த கட்டுரையில்
இரான் அணு விஞ்ஞானி படுகொலை: தோட்டாக்களால் துளைத்தெடுத்த தீவிரவாதிகள் - என்ன நடந்தது?