இப்பதான் இந்த புயலை சமாளிச்சோம்.. அதுக்குள்ள இன்னொன்னா? – வானிலை ஆய்வு மையம் தகவல்

Prasanth Karthick| Last Modified வியாழன், 26 நவம்பர் 2020 (12:11 IST)
வங்க கடலில் உருவான நிவர் புயல் இன்று அதிகாலை கரையை கடந்த நிலையில் மற்றுமொரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறிய நிலையில் அதற்கு நிவர் என பெயரிடப்பட்டது. தீவிர புயலாக உருவெடுத்த நிவர் கரையை தொடும் முன்னர் அதி தீவிர புயலாக மாறி மணிக்கு 145 கி.மீ வேகத்தில் கரையை கடந்தது. இதனால் பல இடங்களில் வீடுகள் சேதாரமடைந்துள்ளதுடன், ஏகபட்ட மரங்களும் சாய்ந்துள்ளன. புயல் கரையை கடந்து விட்டாலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் வங்க கடலின் தெற்கு மைய பகுதியில் மற்றுமொரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 29ம் தேதி உருவாகும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறுமா என்பதை உறுதியாக கூற முடியாது என்றாலும், காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம் முழுவதும் பல இடங்களில் கனமழை தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.இதில் மேலும் படிக்கவும் :