1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 14 செப்டம்பர் 2022 (14:13 IST)

அடுத்த 5 நாட்களில் மழை… வானிலை மையம் எச்சரிக்கை!

இன்று மற்றும் நாளை ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என   தகவல்.


தமிழகம் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாகவே தென்மேற்கு பருவமழையால் நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது.

இதனால் தமிழகத்தில் மேலும் பல பகுதிகளில் கனமழை நீடிக்கும் நிலையில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மீண்டும் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலு குறையும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று மற்றும் நாளை ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும் செப்டம்பர் 16 மற்றும் 17 ஆம் தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 18 ஆம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த இரு தினங்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.