1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 13 செப்டம்பர் 2022 (22:34 IST)

ரஷ்யா கைப்பற்றிய பகுதிகள் மீட்பு -உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

Volodymyr Zelenskyy
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷ்ய ராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட பகுதிகளை  உக்ரைன் மீட்டு வருகிறது எனத் தெரிவித்துள்ளார்

சிறிய நாடாக உக்ரைன் மீது வல்லரசு நாடான ரஷ்யா போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இரு தரப்பிற்கும் இடையே 100 நாட்களுக்கும் மேலாக போர் நடந்து வரும் நிலையில் பல ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், ஐரோப்பா, அமெரிக்காவின் உதவியால் உக்ரைன் தொடர்ந்து ரஷ்யாவுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில், ரஷியா கைப்பற்றிய பகுதிகளை அவர்கள் கைப்பற்றி வருகின்றனர்.

இதுகுறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, வடகிழக்கில் இருந்து சில பகுதிகளை உக்ரைன் மீட்டு வருகிறது.  இதுவரை 6 ஆயிரம் சதுர கிமீ மீட்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.