1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 13 செப்டம்பர் 2022 (19:00 IST)

ரயில்கள் தாமதமாக புறப்பட்டால் பயணிகளுக்கு இலவச உணவு: அதிரடி அறிவிப்பு

Train
ரயில்கள் தாமதமாக வருவதும் புறப்படும் போதும் காலம் காலமாக நடந்து வரும் ஒரு நிகழ்வாக இருந்துவரும் நிலையில் ரயில்கள் தாமதமாக புறப்பட்டால் பயணிகளுக்கு இலவச உணவு வழங்கப்படும் என்ற அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
ராஜ்தானி சதாப்தி மற்றும் தூரந்தோ உள்ளிட்ட அதிவிரைவு ரயில்கள் இரண்டு மணி நேரத்திற்கு மேல் தாமதமாக புறப்பட்டு பயணிகளுக்கு இலவசமாக உணவு வழங்க வேண்டும் என்ற ரயில்வே விதிகளில் கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
 
இலவசமாக வழங்கப்படும் உணவு சிற்றுண்டியா அல்லது மதிய உணவா என்பதை பயணிகள் தேர்வு செய்துகொள்ளலாம் எனவும் விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது
 
 எனவே இனிமேல் ரயில்கள் இரண்டு மணி நேரத்துக்கு மேல் தாமதமாக சென்றால் பயணிகள் தங்களுக்குரிய இலவச உணவு கேட்டு வாங்கிக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது