தொடர்புடைய செய்திகள்
- பொதுமக்களே உஷார்… காத்திருக்கு கடும் வெயில்! – வானிலை ஆய்வு மையம்!
- தஞ்சை பெரியகோவில் சித்திரை திருவிழா! – கொடியேற்றத்துடன் தொடக்கம்!
- இப்போ ராஜகண்ணப்பன் புனிதராகிவிடுவாரா? ஸ்டாலினுக்கு டிடிவி கேள்வி!
- இரவு பணி செய்யும் டிராபிக் காவலர்களுக்கு விடுமுறை! – போக்குவரத்து காவல் அறிவிப்பு!
- லூலூ தமிழகத்திற்கு தேவையில்லை: வியாபாரிகள் நல சங்கத் தவைவர் அறிக்கை
நாளை முதல் ஏப்ரல் 3 ஆம் தேதி வரை மழை!
நாளை முதல் ஏப்ரல் 3 ஆம் தேதி வரை மேற்கு மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என தகவல்.
தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி வருகிறது. வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள், வாகனஓட்டிகள் பலர் சாலையோர இளநீர் கடைகள், பழச்சாறு கடைகளை நாடும் நிலை உள்ளது.
இந்நிலையில் வெப்ப சலனத்தால் தமிழ்நாட்டின் வட உள்மாவட்டங்கள், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, குமரியில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.
மேலும், நாளை முதல் ஏப்ரல் 3 ஆம் தேதி வரை மேற்கு மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நெல்லை, குமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் எனவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
