மிக கனமழை... தமிழகத்திற்கு அதிக வாய்ப்பு!!

Sugapriya Prakash| Last Modified புதன், 13 ஜனவரி 2021 (14:05 IST)
தமிழகத்தில் மிக கனமழை பெய்யும் என்பதால் தாழ்வான பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்பு. 

 
மழைப்பருவக்காலம் முடிந்து விட்ட நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடந்த மூன்று நாட்களாக தென் தமிழக மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாக்குமரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் நீர்நிலைகள் நிரம்பியுள்ளன.
 
இந்நிலையில் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் தமிழக பகுதிகளான நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிக கனமழைக்கு வாய்ப்பு என தெரிவித்துள்ளனர். 
 
மிக கனமழை பெய்யும் என்பதால் தாழ்வான பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்பு திருச்சி, திண்டுக்கல் மாவட்டங்களில் அடுத்த ஒரு மணி நேரத்திற்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


இதில் மேலும் படிக்கவும் :