1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 13 டிசம்பர் 2020 (19:10 IST)

கழிவுநீர் கால்வாயில் கிடந்த செல்லாத 1000 ரூபாய் நோட்டுகள்: கடலூரில் பரபரப்பு

கழிவுநீர் கால்வாயில் கிடந்த செல்லாத 1000 ரூபாய் நோட்டுகள்
கடந்த 2016ஆம் ஆண்டு மத்திய அரசு 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தது என்பது தெரிந்ததே. இதனால் இந்தியா முழுவதும் மிகப்பெரிய பரபரப்பு ஏற்பட்டது 
 
இந்த நிலையில் செல்லாத 1000 ரூபாய் நோட்டுகள் கடலூரில் உள்ள கால்வாய் ஒன்றில் வீசப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
கடலூரில் கழிவுநீர் கால்வாயில் சுமார் ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள செல்லாத ஆயிரம் ரூபாய் நோட்டுகளை போலீசார் கண்டுபிடித்து குறித்து விசாரணை செய்து வருகின்றனர். கடலூர் புதுப்பாளையம் ராமதாஸ் தெருவில் உள்ள கழிவுநீர் கால்வாயில் இந்த செல்லாத நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் இதனை அடுத்து அந்த நோட்டுகளை வீசியது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிப்பு செய்து 4 ஆண்டுகளுக்கு பின்னர் ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வீசப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது