காலையில் பனிமூட்டம், மீத நேரங்களில் வறண்ட வானிலை!
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு வறண்ட வானிலையே நீடிக்கும்.
வானிலை ஆய்வு மையம் இது குறித்து தெரிவித்துள்ளதாவது, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலையே நீடிக்கும். சென்னை உள்பட வட தமிழகத்தில் காலையில் மேகமூட்டமும், பனிமூட்டத்துடன் கூடிய வறண்ட வானிலை நிலவும்.
சென்னையில் காலை நேரங்களில் லேசான பனி மூட்டம் காணப்படும். அடுத்த 2 நாட்களுக்கு மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும்.தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
