1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated: வெள்ளி, 26 மே 2023 (07:58 IST)

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்கும் தேதி தள்ளிவைக்கப்படுகிறதா? இன்று அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்கும் தேதி குறித்து அறிவிப்பு இன்று வெளியாகும் என பள்ளி கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன 
 
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தி வரும் நிலையில் திறக்கும் தேதியை தள்ளி வைக்க வேண்டும் என பல அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
 
மாணவர்களின் கல்வியை விட அவர்களது உடல்நலம் முக்கியம் என்பது பலரது கருத்தாக உள்ளது. இந்த நிலையில் ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில் பள்ளிகள் ஒரு வாரம் அல்லது 10 நாள் தாமதமாக திறக்க வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டது
 
 இந்த நிலையில் தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு தேதி தள்ளிப் போகிறதா என்பது குறித்த அறிவிப்பை இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
தமிழ்நாட்டில் 17 நகரங்களில் நேற்று 100 டிகிரிக்கு அதிகமாக வெயில் அடித்து உள்ளதால் பள்ளிகள் திறப்பு தள்ளி போக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva