தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வீட்டில் சோதனை!
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வீட்டில் சோதனை!
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வீட்டில் திடீரென லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
கடந்த சில நாட்களாக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் திடீரென சோதனை செய்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது லஞ்ச ஒழிப்பு துறையினரின் பார்வை அதிகாரிகள் மீது விழுந்துள்ளது
சற்றுமுன் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலம் அவர்களின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
வருமானத்துக்கு அதிகமாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலம் சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரை அடுத்து இந்த சோதனை நடைபெற்று வருவதாகவும் சோதனைக்கு பின்னரே இது குறித்த முழு விவரங்கள் தெரியவரும் என்றும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்