ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 23 டிசம்பர் 2021 (11:15 IST)

தமிழ்நாட்டில் ஒமிக்ரான் பாதிப்பு விபரம்: சென்னை முதலிடம்!

தமிழகத்தில் நேற்று முன் தினம் வரை ஒரே ஒரு மைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்ட நபர் மட்டுமே இருந்த நிலையில் இன்று திடீரென 33 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதால் தமிழகத்திலும் ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34 ஆக உயர்ந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
பெரும்பாலும் வெளிநாட்டில் இருந்து தமிழகம் வந்தவர்களுக்கு ஒமிக்ரான் தொற்று பரவியுள்ளது என்பது அதிர்ச்சிக்குரிய செய்தியாகும். இந்த நிலையில் தமிழகத்தில் சென்னையில் மட்டும் 27 பேர்கள் ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் அதனை அடுத்து மதுரையில் 4 பேர்கள் திருவண்ணாமலையில் இரண்டு பேர்கள் மற்றும் சேலத்தில் ஒருவரும் ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத் துறை அறிவித்துள்ளது 
 
தமிழ்நாட்டில் மொத்தம் 34 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு என்ற தகவல் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது