துணை முதல்வர் பதவிக்கு பதில் முக்கிய துறை: முடிவுக்கு வந்தது புதுவை பிரச்சனை
புதுவையில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு ஒரு மாதத்திற்கு மேலாகியும் இன்னும் முதலமைச்சர் தவிர வேறு யாரும் பதவி ஏற்காமல் உள்ளனர். என்ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே பதவிகளை பகிர்ந்து கொள்வதில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இன்னும் எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் பதவி ஏற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
துணை முதல்வர், சபாநாயகர் மற்றும் இரண்டு முக்கிய அமைச்சர் பதவி ஆகியவற்றை பாஜக கேட்டுக் கொண்டிருக்கும் நிலையில் துணை முதல்வர் பதவியை பாஜகவுக்கு தர என்.ஆர்.காங்கிரஸ் மறுத்துள்ளது
இந்த நிலையில் தற்போது சபாநாயகர் மற்றும் இரண்டு அமைச்சர் பதவிக்கு பாஜக ஒப்புக்கொண்டதாகவும் அதில் ஒரு அமைச்சர் பதவி உள்துறை அமைச்சர் என்று முடிவாகி இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதற்கு முதல்வர் ரங்கசாமி ஒப்புக்கொண்டதை அடுத்து புதுச்சேரியில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நிலவி வந்த அரசியல் குழப்பத்திற்கு முடிவு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால் அதே நேரத்தில் உள்துறை அமைச்சகம் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டதால் என்ஆர் காங்கிரஸ் நிர்வாகிகள் அதிர்ச்சியில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.