திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 7 ஜூன் 2021 (14:23 IST)

புதுச்சேரியிலும் +2 பொதுத்தேர்வுகள் ரத்து: முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

தமிழகம் உள்பட பல மாநிலங்களில் ஏற்கனவே பிளஸ் டூ தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது புதுவையிலும் பிளஸ் டூ தேர்வு ரத்து என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
சமீபத்தில் பிரதமர் மோடி சிபிஎஸ்சி பிளஸ் டூ தேர்வு ரத்து என்ற முடிவை எடுத்தார். அதன்பிறகு மகாராஷ்டிரா மத்திய பிரதேசம் குஜராத் உத்தரகாண்ட் ஜார்கண்ட் உள்ளிட்ட பல மாநிலங்களில் பிளஸ் டூ தேர்வு அறிவிப்பு வெளியானது 
 
இதனை அடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு ரத்து என்ற முடிவை அறிவித்தார். இதனை அடுத்து மேலும் சில மாநிலங்கள் பிளஸ்டூ தேர்வு ரத்து என்ற முடிவை அறிவிக்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது 
 
அந்தவகையில் சற்றுமுன் புதுவை மாநில முதலமைச்சர் ரங்கசாமி அவர்கள் புதுவையிலும் பிளஸ் டூ தேர்வு ரத்து என்ற அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மாணவர்களின் நலன் கருதி பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதை அடுத்து தமிழகத்தில் பிளஸ் டூ மாணவர்களுக்கு மதிப்பெண் கணக்கிடுவது போலவே புதுவையிலும் கணக்கிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.