திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 6 ஜனவரி 2025 (10:09 IST)

சட்டமன்றத்தில் உரையாற்றவில்லை.. மூன்றே நிமிடத்தில் புறப்பட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி

governor ravi
தமிழக சட்டமன்றம் இன்று கூடிய நிலையில் ஆளுநர் உரையாற்றுவார் என்று கூறப்பட்டது. ஆனால், சட்டமன்றத்திற்கு வந்த ஆளுநர் ரவி மூன்றே நிமிடத்தில் உரையாற்றாமல் புறப்பட்டதாக வெளிவந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சட்டமன்றத்தில் தேசிய கீதம் பாட அனுமதிக்கப்படவில்லை என்று கூறி ஆளுநர் புறப்பட்டதாக கூறப்படுகிறது. தமிழக சட்டசபை இன்று கூடிய நிலையில், அரசு தயாரித்து கொடுத்த உரையை ஆளுநர் வாசிப்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், ஆளுநர் ரவி உரையை வாசிக்காமல் மூன்றே நிமிடத்தில் பேரவையிலிருந்து கிளம்பினார். முதலில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு பதில் தேசிய கீதத்தை பாட வேண்டும் என்று ஆளுநர் கோரிக்கை வைத்ததாகவும், ஆனால் அவரது கோரிக்கை ஏற்று கொள்ளப்படாமல் தமிழ் தாய் வாழ்த்து பாடியதால் ஆளுநர் ரவி பேரவையை தொடங்கியதும் தனது உரையை வாசிக்காமல் புறப்பட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே, கடந்த ஆண்டும் அரசு தயாரித்த உரையை பாதி மட்டும் படித்து விட்டு ஆளுனர் ஆர்.என்.ரவி வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Edited by Siva