1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 6 ஜூலை 2022 (18:49 IST)

நிலத்தடி நீருக்கு ரூ.10,000 கட்டணம்: தமிழக அரசு விளக்கம்

borewell1
நிலத்தடி நீரை எடுப்பதற்கு மத்திய அரசின் நீர்வளத்துறையின் அனுமதி வாங்க வேண்டும் என்றும் இதற்கு ரூபாய் பத்தாயிரம் ரூபாய் கட்டணம் கட்ட வேண்டும் என்று மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது
 
ஆனால் தமிழ்நாடு உள்பட ஒரு சில மாநிலங்களுக்கு இந்த கட்டணம் இல்லை என்று ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் தற்போது தமிழக அரசு இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது 
 
நிலத்தடி நீருக்கு ரூபாய் பத்தாயிரம் கட்டணம் என்ற மத்திய அரசின் நீராதார ஆணையத்தின் உத்தரவு தமிழகத்திற்கு பொருந்தாது என்றும் நிலத்தடி நீர் பாதுகாப்பு நீர் எடுத்தல் தொடர்பாக நடைமுறையில் உள்ள விதிகள் தொடர்ந்து தமிழகத்தில் அமலில் இருக்கும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது