புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 21 பிப்ரவரி 2021 (07:03 IST)

பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க வாய்ப்பே இல்லை: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

10 நாட்களுக்கும் மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் ஏழை எளிய மக்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் கடும் சிக்கலில் உள்ளனர் 
 
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு காரணமாக ஏற்கனவே லாரி வாடகை விலை 25 சதவீதம் உயர்ந்து விட்டதால் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து கொண்டே வருகிறது 
 
இந்த நிலையில் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்றும் மத்திய மாநில அரசுகள் பெட்ரோல் டீசல் மீதான வரிகளை குறைக்க வேண்டும் என்றும் அரசியல் கட்சி தலைவர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் நேற்று பேட்டி அளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மாநில அரசுகள்தான் பெட்ரோல் டீசல் விலையை மீதான வரியை குறைக்க வேண்டும் என்று கூறினார்
 
இதனை அடுத்து பெட்ரோல் டீசல் மீதான வரியை தமிழக அரசு குறைக்க வாய்ப்பே இல்லை என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். பெட்ரோல் டீசல் விலை உயர்வால் மத்திய அரசுக்கு மட்டுமே அதிக லாபம் கிடைப்பதால் விலையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். மொத்தத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பெட்ரோல் மீதான வரியை குறைக்க வாய்ப்பில்லை என்றுதான் தெரிகிறது