திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 20 பிப்ரவரி 2021 (15:44 IST)

கைவிரித்த நிர்மலா: பெட்ரோல் விலை உயர்வுக்கு முடிவே இல்லையா?

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு குறித்து பேசியுள்ளார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். 

 
சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 92.25 ரூபாய், டீசல் லிட்டர் 85.63 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால், இன்று பெட்ரோல் விலை 34 காசுகள் உயர்ந்து, லிட்டருக்கு 92.59 ரூபாய் எனவும், டீசல் விலை 35 காசுகள் உயர்ந்து, லிட்டருக்கு 85.98 ரூபாய் எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது பொதுமக்களை கடும் அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது. 
 
இந்நிலையில் இது குறித்து பேசியுள்ளார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அவர் கூறியதாவது. பெட்ரோல் விலையை கட்டுப்படுத்த முடியுமா? என்பது மகா பயங்கர தர்ம சங்கடமான கேள்வி. நான் என்ன சொன்னாலும் அதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் பெட்ரோல் விலை குறையுமா? குறையாதா? என்ற பதிலை மட்டுமே மீண்டும் கேட்பீர்கள். 
 
பெட்ரோல் விலை உயர்வுக்கு ஒரே ஒரு காரணம் இல்லை. பல்வேறு காரணம் உள்ளது. ஆயில் நிறுவனங்கள் நினைத்தால் விலையை குறைக்க முடியும். எங்கள் கையில் ஏதும் இல்லை. மாநிலத்துக்கு மாநிலம் பெட்ரோல் விலை உயர்ந்து உள்ளது என்பது உண்மையே. எல்லாம் மாநிலமும் ஒத்துழைப்பு தந்தால் ஜி.எஸ்.டிக்கு கீழ் பெட்ரோல் விலையை கொண்டு வர முயற்சி மேற்கொள்ள இயலலாம் என தெரிவித்துள்ளார்.