மின் நுகர்வோரின் ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு எண்ணை இணைக்கும் திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல்
தமிழகத்தில் மின் நுகர்வோரின் ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு எண்ணை இணைக்கும் திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
தமிழக மின்வாரியம் மாநிலத்தில் சுமார் 11 லட்சம் குடிசை வீடுகளுக்கு 100 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கி வருகிறது. இதன் மூலம் ரூ.2.222 கோடி வீடுகள் பயனடைந்து வருகின்றன.
இதன் மூலம் 3 ஆயிரம் கோடிக்கும் அதிகமான செலவு செய்யப்படும் தொகையை மின்வாரியத்திற்குத் தமிழக அரசு மானியமாக வழங்கி வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இந்தச் சலுகையைப் பெறத் தகுதியான நபர் ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைக்க வேண்டும் என தமிழக அரசிதழில் குறிப்பிட்டுள்ளது.
ஆதார் இல்லாதவர்கள், வேறு 137 ஆவணங்களை அளிக்கலாம் என்றும், விரைவில் ஆதார் எண்ணுடன் மின் அட்டை இணைக்கப்பட உள்ளதாகக தகவல் வெளியாகிறது.
Edited by Sinoj