ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 14 அக்டோபர் 2022 (19:22 IST)

அரசு ஊழியர்களுக்கு 10% போனஸ் -தமிழக அரசு அரசாணை வெளியீடு

தமிழகத்தில் தீபாவளி திருநாளை முன்னிட்டு தமிழக அரசு ஊழியர்களுக்கு 10% போனஸ் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் வரும் அக்டோபர் 24 ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் பொதுத்துறை நிறுவன பணியாளர்களுக்கு 10% தீபாவளி போனஸ் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், அரசின் சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்கள், பணியாளர்களுக்கு 8.33% போனஸ் மற்றும் 1.67 % கருணைத் தொகை என மொத்தம் 10% போனஸ் வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இது, அரசு ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.