கொலை வழக்கில் ஆயுள் தண்டனை வழங்கியதால் ஆத்திரம்.. நீதிபதி மீது செருப்பை வீசிய கைதி..!
தெலுங்கானா மாநிலத்தில் கொலை வழக்கில் ஒருவருக்கு நீதிபதி ஆயுள் தண்டனை வழங்கியதால் ஆத்திரம் அடைந்த கைதி, நீதிபதி மீது செருப்பை வீசியுள்ளார். இதனால், அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஜெகத் கிரி குட்டா என்ற பகுதியைச் சேர்ந்த ஒருவர், கொலை முயற்சியில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டார். இதனை அடுத்து, இவர்மீதான வழக்கு கடந்த சில மாதங்களாக நடைபெற்ற நிலையில், நேற்று நீதிபதி தண்டனை குறித்த தீர்ப்பை வழங்கினார். அப்போது அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, கைதி நீதிபதியிடம் பேச விரும்புவதாகக் கூறி, கைலங்கை கழற்ற அனுமதி கோரினார். அவருக்கு நீதிபதி அனுமதியுடன் கைவிலங்கு அகற்றப்பட்ட நிலையில், திடீரென அவர் காலில் இருந்த செருப்பை கழற்றி, நீதிபதி மீது வீசினார்.
இதனால் ஆத்திரம் அடைந்த வழக்கறிஞர்கள், அவரை வெளியே இழுத்துச் சென்று சரமாரியாக தாக்கினர். இது போன்ற சம்பவங்களில் ஈடுபடும் கைதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வக்கீல்கள் திடீரென போராட்டம் செய்ததால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Edited by Siva