1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 8 ஜனவரி 2022 (15:04 IST)

தமிழகத்தில் முழு ஊரடங்கு தேவையில்லை!

கொரோனா 3 ஆம் அலையை கட்டுப்படுத்த தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு தேவை இல்லை என விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் பேட்டி. 

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. கடந்த மாதத்தில் 10 ஆயிரத்திற்கு கீழ் குறைந்திருந்த பாதிப்புகள் மீண்டும் மிக வேகமாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. 
 
இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கிய நிலையில் ஒரே நாளில் 1 லட்சம் பாதிப்புகளை தாண்டியுள்ளது. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,41,986 பேர் பாதித்துள்ளனர். இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் தமிழகத்தில் கொரோனா 3 ஆம் அலை குறித்து பேசியுள்ளார். 
 
அவர் கூறியதாவது, கொரோனா 3 ஆம் அலையை கட்டுப்படுத்த தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு தேவை இல்லை. கொரோனா வைரஸ் கடைசிவரை நம்முடன் தொடர்ந்து பயணிக்கும். கொரோனா கட்டுப்பாடுகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். 
 
சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், அனுமியா உள்ளிட்ட நோய் பாதிப்புகள் இனி அதிகரிக்கக்கூடும். ஒமிக்ரான் 4 மடங்கு வேகமாக பரவுகிறது. ஒமிக்ரான் பாதிப்பு குறைவாக தெரிந்தாலும், தொற்று பாதிப்பு அதிகமாகி வருகிறது நாம் முன்னெச்சரிக்கையுடன் இருந்தால் இதையும் கடந்துவிடலாம் என்று தெரிவித்துள்ளார்.