1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வியாழன், 16 ஜூன் 2016 (16:21 IST)

ம.ந.கூட்டணியை சுடுகாட்டில் புதைத்து விட்டு வந்து கை, கால் கழுவிக் கொண்டிருக்கிறார்கள்

நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் மக்கள் நலக்கூட்டணியை சுடுகாட்டில் புதைத்து விட்டு வந்து கை, கால் கழுவிக் கொண்டிருக்கிறார்கள் என கூறியுள்ளார்.


 
 
கடந்த 2015, செப்டம்பர் மாதம் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் மீது முதலமைச்சர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக வழக்கு தொடரப்பட்டது.
 
இந்த வழக்கில் ஆஜராக நாகர்கோவில் நீதிமன்றத்துக்கு வந்த அவர், நீதிமன்றத்தில் ஆஜரான பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அதிமுக ஆட்சியில் ஆசிரியர், பேருந்து நடத்துநர் போன்ற பணிக்கு லஞ்சம் வாங்கினார்கள் என பேசினேன். அதற்காக என் மீது அவதூறு வழக்குத் தொடர்ந்திருக்கிறார்கள். லஞ்சம் கொடுத்து வேலை பெற்ரவர்களின் பட்டியலை நான் ஆதாரத்தோடு வழக்கு நடைபெறும்போது நிரூபணம் செய்வேன் என்றார்.
 
மேலும் மக்கள் நலக்கூட்டணி 6 பேர் கொண்ட கூட்டணி என்பது, 4 பேர் தூக்கவும், ஒருவர் சடலமாக இருக்கவும், ஒருவர் சங்கு ஊதி, மணியடிக்கவும் என்று நான் தேர்தலுக்கு முன்பே கூறினேன், அதுதான் இப்போது நடந்துள்ளது. மக்கள் நலக்கூட்டணியை சுடுகாட்டில் புதைத்து விட்டு வந்து கை, கால் கழுவிக் கொண்டிருக்கிறார்கள் என்றார் இளங்கோவன்.