எக்கச்சக்க சர்ப்ரைஸ் இருக்கோ? நாளை தமிழக பட்ஜெட்! சென்னையில் 100 இடங்களில் நேரலைக்கு ஏற்பாடு!
நாளை சட்டமன்றத்தில் தமிழக பட்ஜெட் தாக்கல் செய்ய இருக்கும் நிலையில் இந்த பட்ஜெட்டை சென்னையில் 100 இடங்களில் பொதுமக்கள் நேரலையில் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது. நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்யும் தமிழக பட்ஜெட்டை பொதுமக்கள் நேரலையில் காணும் வகையில் சென்னையில் 100 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்ட்ரல் ரயில் நிலையம், முரசொலி மாறன் பூங்கா, அண்ணா நகர் டவர் பூங்கா, கோயம்பேடு பேருந்து நிலையம், மெரினா கடற்கரை, பாண்டிபஜார் சாலை, கத்திப்பாரா பூங்கா, திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர், , தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் உள்ளிட்ட இடங்களில் காலை 9.30 மணி முதல் ஒளிபரப்பப்படும் என சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதேபோல் மார்ச் 15 அன்று தாக்கல் செய்யப்படும் வேளாண் பட்ஜெட்டும் காலை 9.30 மணி முதல் எல்.இ.டி. திரையின் வாயிலாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Siva