வியாழன், 12 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 22 ஜூலை 2024 (15:15 IST)

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் புதிய தலைவர் தேர்வு.. பா ரஞ்சித் ஏமாற்றமா?

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் புதிய தலைவராக உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பி.ஆனந்தன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங் மறைவை தொடர்ந்து புதிய தலைவரை தேர்வு செய்து தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
 
தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக இருந்த ஆர்ம்ஸ்ட்ராங் கடந்த 5ஆம் தேதி மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்ட நிலையில் அவரது கொலை தொடர்பாக கைது நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 
 
ஏற்கனவே இந்த வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் திமுக, அதிமுக, பாஜக , தமாக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. 
 
இந்த நிலையில் தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மறைவை அடுத்து புதிய தலைவர் தேர்வு விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இயக்குனர் ரஞ்சித் உள்பட ஒரு சில பிரபலங்கள் தலைவர் பதவிக்கான பெயர் அடிபட்ட நிலையில் தற்போது உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பி ஆனந்தன் தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் 
 
இதனை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக பா ரஞ்சித் தேர்வு செய்யப்படுவார் என்று அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்த நிலையில் இந்த அறிவிப்பு ஏமாற்றத்தை அளித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
 
Edited by Siva