1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 22 ஜூலை 2024 (08:45 IST)

ஆம்ஸ்ட்ராங் கொலையில் திமுக உள்பட அனைத்து கட்சியினரும் சம்பந்தம்.. என்ன தான் நடக்குது..!

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏற்கனவே 11 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது கைது நடவடிக்கை தொடர்ந்து வருகிறது என்பதும் குறிப்பாக அரசியல் கட்சியில் உள்ள பிரபலங்கள் கைது செய்யப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆம்ஸ்ட்ராங் கொலையால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது என்று கூறிய பாஜக அதிமுக பிரமுகர்களும் கைது செய்யப்பட்டார்கள் என்பதும் இந்த வழக்கில் உண்மை குற்றவாளியை கண்டுபிடிப்போம் என்று கூறிய திமுகவில் கூட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங்  கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அரசியல்வாதிகளின் பட்டியலை பார்ப்போம்.

1. ஆம்ஸ்ட்ராங் கொலையில் தி.மு.க வழக்கறிஞர் அருள் கைது, அதன்பின் கட்சியிலிருந்து நீக்கம்.

2. ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்புடைய அ.தி.மு.க வழக்கறிஞர் மலர்க்கொடி, கவுன்சிலர் ஹரிகரன் கைது, அதன்பின் இருவரும் கட்சியிலிருந்து நீக்கம்.

3. ஆம்ஸ்ட்ராங்க் கொலையில் தொடர்புடைய பா.ஜ.க-வின் அஞ்சலை கைது, அதன்பின் கட்சியிலிருந்து நீக்கம்.

4. ஆம்ஸ்ட்ராங்க் கொலையில் தொடர்புடைய தா.மா.கா-வின் ஹரிகரன் கைது, அவரும் கட்சியிலிருந்து நீக்கம்.

ஆக மொத்தம் முக்கிய கட்சிகளில் உள்ளவர்கள் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டு இருக்கின்றனர் என்பது தெரிய வருகிறது.

Edited by Siva