ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 22 ஜூலை 2024 (10:18 IST)

பா ரஞ்சித் யார் என்றே எனக்கு தெரியாது.. அமைச்சர் சேகர்பாபு..!

sekar babu
இயக்குனர் பா ரஞ்சித் யார் என்று எனக்கு தெரியாது என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பேட்டி அளித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் இயக்குனர் பா ரஞ்சித் ஆளும் திமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார் என்பதும் குறிப்பாக சமீபத்தில் நடந்த நினைவேந்தல் நிகழ்ச்சியின் போது திமுக மற்றும் திமுக அமைச்சர்களை வெளுத்து வாங்கினார் என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் நான் பா. ரஞ்சித் கருத்துக்கு திமுக பிரபலங்கள் சிலர் பதிலடி கொடுத்து வருகிற நிலையில் அமைச்சர் சேகர்பாபுவிடம் இயக்குனர் பா ரஞ்சித் திமுகவை விமர்சனம் குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அமைச்சர் சேகர்பாபு பா. ரஞ்சித்  யார் என்று எனக்கு தெரியாது அவர் அரசியல்வாதியாக இருந்திருந்தால் எனக்கு தெரிந்திருக்கும் என்று கூறினார். அவரது இந்த பதில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக திமுக ஆதரவாக இருந்தவர், திமுகவுக்கு தான் கடந்த தேர்தலில் வாக்களித்தேன் என்று கூறியவர், ரஜினிகாந்த் உள்பட பல பிரபலங்களை வைத்து படங்களை இயக்கியவர் பா ரஞ்சித்.  அவரை யார் என்றே தெரியாது என்று அமைச்சர் சேகர்பாபு கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Mahendran