வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 6 ஆகஸ்ட் 2024 (17:08 IST)

மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இலவச சைக்கிள் தரமற்றதா? அதிர்ச்சி குற்றச்சாட்டு..!

தமிழக அரசின் சார்பில் மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்ட சைக்கிள் தரமற்றதாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
தமிழக அரசின் சார்பில் கடந்த சில ஆண்டுகளாக மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்பதும் இந்த சைக்கிள் மாணவ மாணவிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்பதும் தெரிந்தது.
 
11 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் முறையாக நடந்து கொண்டிருந்த நிலையில் இந்த ஆண்டு தரம் இல்லாத சைக்கிள்கள் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
 
மாணவர்கள் மற்றும் பெற்றோர் இலவச சைக்கிளை பார்த்து அதிர்ச்சி அடைந்து பழைய இரும்பு கடைகளுக்கு விற்று வருவதாக புகார் வெளியாகியுள்ளது. சமூக வலைதளங்களில் இது குறித்த புகார்கள் கூறப்பட்டு வருகிறது. இந்த தரமற்ற சைக்கிளை திரும்ப பெற்றுக் கொண்டு தரமான சைக்கிள்களை வழங்க வேண்டும் என்று மாணவர்கள் மற்றும் பெற்றோர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
 
ஆயிரம் ரூபாய் செலவு செய்தால் தான் இந்த சைக்கிள் உருப்படியாக இருக்கும் என்றும் விலையில்லா சைக்கிள்கள் என்று பெயரில் தரமற்ற சைக்கிள்களை வழங்கி உள்ளனர் என்றும் கூறப்பட்டு வருகிறது. சமீபத்தில் தரமற்ற இலவச சைக்கிளை வழங்கியதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் கண்டித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran