திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 29 ஜனவரி 2024 (15:32 IST)

இலங்கைக் கடற்படையினர் கைது செய்யபட்ட நாகை மீனவர்கள் விடுதலை...!

இலங்கை கடற்படையினரால் அவ்வப்போது தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு வரும் நிலையில்  கடந்த 14ஆம் தேதி 10 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் அவர்களை விடுதலை செய்ய இலங்கை நீதிமன்றம் தற்போது உத்தரவு பிறப்பித்துள்ளது 
 
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக நாகை மீனவர்கள் 10 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களது படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டது. 
 
இந்த நிலையில் விசாரணைக்காக அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் மீனவ துறையினரின் கோரிக்கைக்கு இணங்க 10 பேரையும் இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்ய உத்தரவிட்டது. 
 
மேலும் அவர்களது படங்களை நாட்டுடைமையாக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
Edited by Siva