திங்கள், 11 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 1 செப்டம்பர் 2022 (09:02 IST)

இளங்கலை பட்டப்படிப்புகளில் தமிழ் பாடம் கட்டாயம்: உயர்கல்வித்துறை உத்தரவு

Ponmudi
தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் இளங்கலை படிப்புகளில் தமிழ் பாடம் கட்டாயம் என உயர் கல்வித்துறை உத்தரவிட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் இளங்கலை பட்டப்படிப்பில் இரண்டாவது செமஸ்டரில் தமிழ்ப்பாடம் கட்டாயம் உண்டு என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சற்றுமுன் உத்தரவு பிறப்பித்துள்ளார். 
 
தமிழகத்தில் உள்ள ஒரு சில கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் தமிழ் மொழிப் பாடத்தை நடத்த வில்லை என்ற தகவல் வெளியானதை அடுத்து அமைச்சர் பொன்முடி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார் 
 
அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் இளங்கலை பட்டப்படிப்பில் இரண்டாவது செமஸ்டரில் தமிழ் கட்டாயம் என்றும் இதை பின்பற்றாத கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உயர் கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
தாய்மொழி கல்வியை கல்லூரி மாணவர்களுக்கு புகுத்துவதில் திமுக அரசு உறுதியாக இருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.