விடியற்காலையிலேயே வெளுக்கும் கனமழை! – 4 மாவட்டங்களில் விடுமுறை!
தமிழகத்தின் சில பகுதிகளில் விடியற்காலை முதலே கனமழை பெய்து வருவதால் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த வாரம் முதலாகவே பல பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த வாரமும் கனமழை நீடித்து வரும் சூழலில் பல பகுதிகளில் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இன்று விடியற்காலை முதலே டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டிணம் ஆகிய 4மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.