1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 17 நவம்பர் 2022 (14:24 IST)

எனது கிட்னியை திருடிய டாக்டரின் கிட்னியை எடுக்க வேண்டும்: போலீஸில் புகார் அளித்த பெண்

kidney
எனது கிட்னியை திருடிய டாக்டரின் கிட்னியை எடுத்து எனக்கு சிகிச்சை செய்ய வேண்டும் என பெண் ஒருவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 35 வயது சுனிதா என்பவர் வயிற்று வலி என தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவரது கர்ப்பப்பையில் கோளாறு இருப்பதாகவும் உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார். 
 
இதனையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் அறுவை சிகிச்சை செய்யும் போது அந்த டாக்டர். சுனிதாவின் 2 கிட்னியையும் எடுத்து விட்டதாக தெரிகிறது. இதனை அடுத்து மீண்டும் வயிற்று வலியால் துடித்த சுனிதா வேறொரு மருத்துவமனையில் சிகிச்சை பெற சென்ற போதுதான் தன்னுடைய  இரண்டு கிட்னி திருடப்பட்டதை அறிந்தார். 
 
இதனை அடுத்து அவர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். எனது கிட்னியை திருடிய டாக்டரின் கிட்னியை எடுத்து எனக்கு சிகிச்சை செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த நிலையில் இந்த விவகாரம் பெரிதானதை அடுத்து சுனிதாவுக்கு சிகிச்சை செய்த மருத்துவர் தலைமறைவாகி உள்ளதாக கூறப்படுகிறது
 
Edited by Mahendran