வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 13 நவம்பர் 2022 (11:43 IST)

கல்லை எடுக்க சொன்னா.. கிட்னியவே எடுத்து மருத்துவமனை! – உ.பியில் அதிர்ச்சி சம்பவம்!

உத்தர பிரதேசத்தில் கிட்னியில் கல் இருப்பதாக சிகிச்சையில் சேர்ந்தவருக்கு கிட்னியையே எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசத்தில் உள்ள நாக்லா தால் என்ற கிராமத்தை சேர்ந்த சுரேஷ் சந்திரா என்பவர் செக்யூரிட்டியாக பணிபுரிந்து வந்துள்ளார். சமீபத்தில் சுரேஷ் சந்திராவுக்கு அடிக்கடி அடிவயிற்றில் வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள ஸ்கேன் செண்டர் ஒன்றிற்க் சென்றுள்ளார். அங்கு அவரை ஸ்கேன் செய்து பார்த்ததில் அவரது இடது கிட்னியில் கல் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

இதனால் கடந்த ஏப்ரல் மாதத்தில் அலிகார் குரேஷி பைபாஸில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட சுரேஷ் சந்திராவுக்கு அறுவை சிகிச்சை நடந்துள்ளது. பின்னர் அவருக்கு கிட்னியில் இருந்து கல் அகற்றப்பட்டு விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.


பின்னர் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் கடந்த மாதம் மீண்டும் அடிவயிற்றில் வலி ஏற்பட்டுள்ளது. இதனால் பழைய ஸ்கேன் ரிப்போர்ட்டுகளை எடுத்துக் கொண்டு வேறொரு மருத்துவரை சந்தித்துள்ளார். அந்த மருத்துவர் சுரேஷ் சந்திராவை ஸ்கேன் செய்து பார்த்ததில் அவருக்கு இடதுபக்க கிட்னியே இல்லாதது தெரிய வந்துள்ளது.

இதையடுத்து சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனை மீது சுரேஷ் சந்திரா சுகாதாரத்துறையில் புகார் செய்துள்ளார். அதன் அடிப்படையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Edit By Prasanth.K