செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 5 டிசம்பர் 2017 (15:18 IST)

500 ரூபாய்க்கு ஆசைபட்டு பிரச்சனையில சிக்கிக்கிட்டியே பரட்ட

இறப்பு சான்று தர ஐநூறு ரூபாய் லஞ்சம் கேட்ட அரியலூர் வட்டாட்சியருக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 
அரியலூரில் நகராட்சி அலுவலகத்தில் ஒருவர், உறவினரின் இறப்பு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தார். அவரிடம் வட்டாட்சியர் ஐநூறு ரூபாய்  லஞ்சம் கேட்டுள்ளதாகத் தெரிகிறது. இது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறையிடம் அவர் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் ரசாயணம் தடவிய நோட்டை  வட்டாட்சியரிடம் கொடுத்த போது கையும் களவுமாக மாட்டிக் கொண்டார்.
 
இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்றம் அவருக்கு 7 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்தும் லஞ்சம் வாங்கிய புகாரால் அந்த வட்டாட்சியர் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது.