1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 7 நவம்பர் 2017 (16:04 IST)

என்னுடன் இருப்பவர்கள் ஊழல் செய்தால்? - கமல்ஹாசன் அதிரடி பதில்

நடிகர் கமல்ஹாசன் விரைவில் அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக ஏற்கனவே அறிவித்துவிட்டார். இந்நிலையில், அவரது பிறந்த நாளான இன்று சென்னை தி.நகரில் தனது நற்பணி மன்ற செயலி அறிமுக விழாவில் அவர் கலந்து கொண்டு பேசினார்.  


 

 
அப்போது, மையம்விசில் எனும் செயலியை அவர் அறிமுகம் செய்தார். மேலும், #maiamwhistl, #theditheerpomvaa #vituouscycle #KH என்கிற ஹேஷ்டேக்குகளை அவர் அறிமுகப்படுத்தினார். 
 
அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய சில கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.  அப்போது நீங்கள் நேர்மையானவர் சரி. உங்களுடன் வருபவர்கள் ஊழல் செய்தால் என்ன செய்வீர்கள்? என ஒரு நிருபர் கேள்வி எழுப்பினார்.
 
அதற்கு பதிலளித்த கமல்ஹாசன் “அப்படி நடக்கூடாது என்பதற்காகத்தான் இங்கே வந்து நின்று கொண்டிருக்கிறேன். ஊழலை நான் எப்படி அனுமதிப்பேன். அப்படி நடந்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பேன். தவறான வழியில் வரும் பணத்தை என் நிறுவனத்திற்குள்ளே நான் அனுமதிப்பதில்லை, நான் ஆரம்பிக்கும் கட்சியிலும் அனுமதிக்க மாட்டேன்” என தெரிவித்தார்.