திடீரென விஜய்க்கு எதிராக திரும்பி டி.ராஜேந்தர்: பரபரப்பு பேட்டி

rajendhar
திடீரென விஜய்க்கு எதிராக திரும்பி டி.ராஜேந்தர்
Last Modified வெள்ளி, 14 பிப்ரவரி 2020 (22:03 IST)
சமீபத்தில் விஜய் வீட்டில் நடந்த வருமான வரி சோதனை குறித்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கருத்து தெரிவித்த டி ராஜேந்தர் விஜய்க்கு ஆதரவாக சில கருத்துக்களை தெரிவித்தார். அதுமட்டுமின்றி தர்பார் விஷயத்தில் ரஜினிக்கு எதிராகவும் ஒரு சில கருத்துக்களை தெரிவித்தார். டி.ராஜேந்தரின் இந்த கருத்துக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்த டி ராஜேந்தர் திடீரென விஜய்யை மறைமுகமாக தாக்கும் வகையில் ஒரு கருத்தை கூறியுள்ளார். வருமான வரி சோதனையை சந்தித்தவர்கள் தங்களின் கை சுத்தமாக இருக்கிறது என பொது மக்களிடம் தெரிவிக்க வேண்டிய தானே. சினிமாத்துறையில் அரசியல் பற்றி பேசுபவர்கள் அனைத்தையும் சந்திக்க வேண்டிவரும் என கூறியுள்ளார்
டி ராஜேந்திரன் இந்த கருத்து விஜய்யை மறைமுகமாக தாக்குவதாகஅரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் அவர் விஜய்யை மனதில் வைத்து இதனை கூறவில்லை என்றும் சினிமாவில் அரசியல் பேசுபவர்கள் அனைவருக்கும் பொதுவான கருத்தையே தெரிவித்ததாகவும் அவரது தரப்பினர் விளக்கம் அளித்துள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :