1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Updated : வெள்ளி, 14 பிப்ரவரி 2020 (20:49 IST)

ஓட்டுக்கு பணம் கொடுத்தால் சிறை... ஆந்திர மாநில முதல்வர் அதிரடி !

ஆந்திர மாநிலத்தில் ஓட்டுக்கு பணம் கொடுத்தால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.
 
கடந்த ஆண்டு ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. முதல்வராகப் பதவியேற்ற ஜெகன் மோகன் ரெட்டி பல அதிரடி மாற்றங்களை திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இந்நிலையில் விரைவில் அங்கு உள்ளாட்சி தேர்தல் வரவுள்ளது. அதற்காக பல்வேறு கட்சிகள் பல வியூகங்களை வகுத்துள்ளனர். எனவே, முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அரசு, உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தால் 3 ஆண்டுகள் சிறைதண்டனை வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.
 
மேலும்,  மார்ச் 5 ஆம் தேதிக்குள் அங்கு தேர்தல் வரலாம் என தகவல் வெளியாகிறது.