ஐ.பி.எல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் கைது
உத்திர பிரதேசத்தில் ஐ.பி.எல் போட்டிகளை மையமாக வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் பதினொறாவது பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் சில தினங்களுக்கு முன்பு துவங்கியது.
இந்நிலையில், ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை வைத்து உத்திர பிரதேச மாநிலம் நொய்டாவில் சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போலீசார் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட மூன்று பேரை கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து 21 லட்சம் ரொக்கம், 3 லேப்டாப் மற்றும் 40 மொபைல் போன்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் துவங்கிய சில தினங்களில் சூதாட்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.