திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 4 பிப்ரவரி 2024 (10:34 IST)

பாஜக 300 தொகுதிகளில் ஜெயிக்கும், ஆனால் தமிழ்நாட்டில் ஜீரோ தான்: எஸ்.வி.சேகர்..

வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக நாடு முழுவதும் 300 தொகுதிகளில் ஜெயிக்கும் என்றும் பிரதமர் மோடி மீண்டும் மூன்றாவது முறையாக பிரதமர் பதவியை ஏற்பார் என்றும் நடிகர் எஸ் வி சேகர் தெரிவித்தார். 
 
ஆனால் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பாஜகவுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது என்றும் ஜீரோ தான் கிடைக்கும் என்றும் அதற்கு காரணம் முழுக்க முழுக்க அண்ணாமலை தான் என்றும் அவர் தெரிவித்தார்.
 
நடைபயணம் போனால் பார்க்க வருபவர்கள் எல்லாம் ஓட்டு போடுவார்கள் என்று அண்ணாமலை தவறான கணக்கு போடுகிறார் என்றும் அவரால் ஒரு சீட்டை கூட பாஜகவுக்கு வெற்றி பெற்று தர முடியாது என்றும் அவர் தெரிவித்தார். 
 
ஆனால் அதே நேரத்தில் பிரதமர் மோடியின் செயல்பாடுகள் மக்களுக்கு பிடித்திருப்பதாகவும், ராமரின் அருள் அவருக்கு இருப்பதாகவும், அதனால்  பாரதிய ஜனதா கட்சி 300 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று அவர் தெரிவித்தார் 
 
 மேலும் விஜய் அரசியல் குறித்து கூறிய போது விஜய் ஒரு தேர்தலில் தனித்து நின்று போட்டியிட்டு தனது வாக்கு சதவீதத்தை நிரூபிக்க வேண்டும் என்றும் அதன் பிறகு தான் அவர் அரசியலில் நிலைப்பாரா? இல்லையா என்பதை பற்றி சொல்ல முடியும் என்றும் தெரிவித்தார்.
 
Edited by Siva