வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 17 செப்டம்பர் 2018 (13:15 IST)

தெறிக்கவிட்ட எச்.ராஜா ஜீ: வாண்டட்டாய் வந்து சிக்கிய எஸ்.வி.சேகர்

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது ஏற்பட்ட தகராறில் ஹைகோர்ட்டையும், காவல் துறையையும் தகாத வார்த்தைகளால் பேசிய எச்.ராஜாவிற்கு ஆதரவு தெரிவித்து சிக்கலில் சிக்கியுள்ளார் எஸ்.வி.சேகர். 
 
பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா ஹைகோர்ட்டாவது மயிராவது, காவல்துறை ஒரு ஊழல்துறை, டி.ஜி.பி வீட்ல ரெய்டு நடக்குது நீங்கெல்லாம் யூனிபார்ம கலட்டிட்டு வேற வேலைக்கு போங்க, போலீசுக்கு வெட்கமில்லயா? முஸ்லீம், குறிஸ்தவன் தர மாதிரி நானும் உங்களுக்கு லஞ்சம் தரேன் என பல தேவையற்ற பேச்சுக்களை பேசினார். 
 
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி எச்.ராஜாவிற்கு எதிராக பலர் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். ஏற்கனவே பெண் பத்திரிக்கையாளரை அவமானப்படுத்தும் விதமாக பேசி கைது செய்யப்படாமல் உள்ள எஸ்.வி.சேகர் எச்.ராஜாவிற்கு ஆதரவு தெரிவித்து சிக்கலில் சிக்கியுள்ளார். 
 
எச்.ராஜாவின் வீடியோவை எஸ்.வி சேகர் ஷேர் செய்து, தெறிக்க விட்ட எச்.ராஜா ஜீ, என பதிவிட்டுள்ளார். இதனை கண்ட இணைய வாசிகள், அவரது பதிவை திட்டியும், கிண்டல் செய்தும் வருகின்றனர். எச்.ராஜாவை மட்டும் திட்டி வந்தவர்களுக்கு தீணியாக வாண்டட்டாய் வந்து சிக்கியுள்ளார் எஸ்.வி.சேகர் என பலர் அவரை கமெண்டுகளில் வருத்தெடுத்து வருகின்றனர்.