1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : ஞாயிறு, 16 செப்டம்பர் 2018 (17:30 IST)

ஹைகோர்ட்டை ம...ன்னு திட்டிய எச்.ராஜா மீது நடவடிக்கை பாயும் - அமைச்சர் ஜெயக்குமார் கொந்தளிப்பு

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது ஏற்பட்ட தகராறில் ஹைகோர்ட்டையும், காவல் துறையையும் தகாத வார்த்தைகளால் பேசிய எச்.ராஜா மீது நடவடிக்கை பாயும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
பாஜகவினர் புதுக்கோட்டை மாவட்டம் மெய்யபுரம் அருகே உள்ள பள்ளிவாசல் பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலத்திற்காக மேடை அமைக்க அனுமதி கேட்டுள்ளார். இதனால் பிரச்சனை ஏற்படும் என்பதற்காக போலீஸ் இந்த கூட்டத்திற்கு மேடை அமைக்க மறுப்பு தெரிவித்துவிட்டது.
 
இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா போலீஸாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.  ஹைகோர்ட்டின் உத்தரவுப்படி தான் நடக்கிறோம் என போலீஸார் கூறினர். ஹைகோர்ட்டாவது மயிராவது, காவல்துறை ஒரு ஊழல்துறை, டி.ஜி.பி வீட்ல ரெய்டு நடக்குது நீங்கெல்லாம் யூனிபார்ம கலட்டிட்டு வேற வேலைக்கு போங்க, அங்க புழல் சிறைல முஸ்லீம் பயங்கரவாதிகளுக்கு கலர் டிவி, சகல வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. போலீசுக்கு வெட்கமில்லயா? முஸ்லீம், குறிஸ்தவன் தர மாதிரி நானும் உங்களுக்கு லஞ்சம் தரேன். எங்களுக்கு மேடை போட அனுமதி கொடுங்க என கண்டமேனிக்கு மதக்கலவரத்தை தூண்டும் விதமாக பேசினார். எச்.ராஜாவின் இந்த கருத்திற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் எச்.ராஜாவின் இந்த கீழ்த்தரமான பேச்சு குறித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார் காவல் துறையையும், நீதிமன்றத்தையும் எச்.ராஜா கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் மீது விரைவில் நடவடிக்கை பாயும் என அவர் தெரிவித்தார்.
 
இவரையும் எஸ்.வி சேகர் மாதிரி ஜாலியாக வெளியே திரிய விடாமல் விரைவில் கைது செய்ய வேண்டும் என்பதே மக்கள் பலரின் ஆதங்க கருத்தாக உள்ளது.