திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 8 ஜூலை 2018 (17:00 IST)

கேப்டன் கூல் தோனிக்கு வயதாகி விட்டது - கூறியது யார்?

தோனியின் பிறந்தநாளான நேற்று அவரது மகள் தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறியதோடு அப்பா உங்களுக்கு வயதாகிவிட்டது என்றும் கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் வீக்கெட் கீப்பரும், பேட்ஸ்மேன்களில் ஒருவருமான முன்னாள் கேப்டன் மிஸ்டர் கூல் தோனி நேற்று தனது 37வது பிறந்தநாளை கொண்டாடினார். 2004 ஆம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமான தோனி, அனைத்து விதமான போட்டிகளையும் சேர்த்து மொத்தம் 500 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். 
 
சர்வதேச கிரிக்கெட் வாரியம் நடத்தும் மூன்று வித தொடர்களிலும் கோப்பையை வென்ற ஒரே கேப்டன் என்ற பெருமையை தோனி பெற்றுள்ளார். 
 
தோனியின் பிறந்தநாளான நேற்று அவருக்கு பல கிரிக்கெட் வீரர்களும் பிரபலங்களும் வாழ்த்துகளை தெரிவித்தனர். தோனி தனது குடும்பத்தினருடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார்.
தோனியின் மகள் ஸிவா, பிறந்த நாள் வாழ்த்துகள் அப்பா என்ற பாடலை பாடினார். அதில் அப்பா... உங்களுக்கு வயதாகி வருகிறது என்று ஸிவா பாடியுள்ளது அனைவரையும் கவர்ந்துள்ளது. இப்பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.