சைக்கிள் வாங்க சேர்த்த காசு; கொரோனா நிதியாக கொடுத்த மாணவன்!

Corona fund
Prasanth Karthick| Last Modified புதன், 26 மே 2021 (13:29 IST)
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் முதல்வர் நிதிக்கு சைக்கிள் வாங்க சேகரித்த காசை மாணவன் அளித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு பலரும் நிதி அளித்து வருகின்றனர். பெரும் தொழிலதிபர்கள், அரசியல் கட்சி பிரமுகர்களும் நிதியளித்து வரும் நிலையில், சாதாரண மக்களும் நிதி அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் திருநெல்வேலியை சேர்ந்த கோபி பத்மநாதன் என்னும் 7ம் வகுப்பு படிக்கும் சிறுவன் சைக்கிள் வாங்குவதற்காக உண்டியலில் பணத்தை சேர்த்து வந்துள்ளார். இந்நிலையில் பலரும் முதல்வர் நிவாரண நிதிக்கு நிதி அளித்து வருவதை கண்டு தானும் நிதியளிக்க விரும்புவதாக தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார்.

அதை தொடர்ந்து நெல்லை ஆட்சியரை நேரில் சந்தித்த கோபி பத்மநாதன் தான் உண்டியலில் சேர்த்து வைத்திருந்த ரூ.2,392 ஐ அளித்துள்ளார். மேலும் பல இடங்களிலும் மாணவர்கள் தாங்கள் சேர்த்த தொகையை இதுபோல நிவாரண நிதிக்கு அளித்து வருகின்றனர்.இதில் மேலும் படிக்கவும் :