வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 22 ஜூலை 2020 (11:04 IST)

இரண்டாவது திருமணம் செய்ய ஆசை! குடும்பத்தை கொன்று கொளுத்திய கொடூரன்!

இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்ட ஒருவர் தனது மனைவி, குழந்தைகளை கொன்று வீட்டையும் கொளுத்திய சம்பவம் எகிப்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எகிப்தை சேர்ந்த நபர் ஒருவருக்கு திருமணமாகி மனைவியும், நான்கு குழந்தைகளும் உள்ளனர். இந்த நபருக்கு வேறு ஒரு பெண்ணுடன் சமீப காலமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பெண் ஏற்கனவே திருமணமானவர். எனினும் இவர் மேல் உள்ள ஆசையால் தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டு வருவதாக கூறியுள்ளார். ஆனால் இதற்கு தடையாக தனது குடும்பம் இருப்பதை அந்த ஆண் உணர்ந்துள்ளார்.

இதனால் வீட்டில் உள்ள தனது தாய், மனைவி மற்றும் நான்கு குழந்தைகளையும் கழுத்தை நெறித்து இரக்கமின்றி கொன்றுள்ளார். நான்காவது பெண் குழந்தையை கழுத்தை நெரிக்கும்போது சிறுமி மயங்கி விடவே, சிறுமி இறந்ததாக எண்ணி வீட்டில் கேஸ் சிலிண்டரை திறந்து பற்றவைத்து விபத்து போல ஜோடனை செய்துள்ளார். ஆனால் மயக்கத்தில் இருந்த கடைசி மகள் நினைவு திரும்பி எப்படியோ அங்கிருந்து தப்பியுள்ளார். பிறகு இதுகுறித்து சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.